திருடர்கள் ஜாக்கிரதை!

கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி ரயில் மற்றும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் நகை, பணம் மற்றும் பயணிகளின் உடமைகளை திருடி வருகின்றனர். 

ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் ஜன்னலோரம் நகை அணிந்து அமரக்கூடாது. மற்ற பயணிகளிடம் தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் அதனை அலட்சியம் செய்து சில பெண் பயணிகள் ரயில்  மற்றும் பஸ்களில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்து வருகிறார்கள்.
இது கொள்ளையர்களுக்கு மிகவும் சாதகமாக ஒன்று. மேலும் ரயில் மற்றும் பஸ்களில் ஏறி தூங்கி கொண்டு இருக்கும் பயணிகளின் உடமைகளை திருடர்கள்  திருடிச்செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.
எனவே நீங்கள் எங்கும் பயணம் செய்தாலும் ஜாக்கிரதை முக்கியம் என போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.    

Close