வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடைசி வாய்ப்பு…!

Want create site? Find Free WordPress Themes and plugins.

2016 நவம்பர் 9 ம் தேதியிலிருந்து டிசம்பர் 30-ந்தேதிவரையிலான கால கட்டத்தில் வெளிநாட்டில் இருந்தவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்.ஐகள்)மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு (இந்தியாவில் வசிப்பவர்கள்) செல்லாத பழைய 500,1,000 ரூபாய்நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ரிசர்வ் வங்கி அளித்து உள்ளது.
சென்னையில் உள்ளஇந்தியரிசர்வ் வங்கியில் இவர்கள் திங்கள் கிழமை முதல்வெள்ளிக் கிழமை வரைகாலை10 மணிமுதல்பிற்பகல் 2.30 மணி வரையில் செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கான கடைசிநாள், 2017 மார்ச் 31 ம்தேதி.

செல்லாத நோட்டுகளை மாற்றும்போது, கீழ்காணும் ஆவணங்களை ரிசர்வ் வங்கியிடம் அவர்கள் வழங்கவேண்டும்.

1. வெளிநாட்டில் இருந்த,இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள், 2016 நவம்பர் 9 ம் தேதி முதல்டிசம்பர் 30 ம் தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல்
2. இந்திய குடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும்முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசிபக்கங்கள்;
3. அடையாளச் சான்றுஆவணம்அல்லதுஆதார்அட்டை
4.வருமானவரிக்கணக்கு எண்அட்டையின் நகல்
5. அனைத்து வங்கிக் கணக்குகளின் 8.11.16 முதல் 30.12.16 வரையிலான அறிக்கை நகல்

என்ஆர்ஐகள்சமர்பிக்க வேண்டிய ஆதாரங்கள்:

1. 2016நவம்பர் 9 ம் தேதி முதல்டிசம்பர் 30 ம் தேதிவரை வெளிநாட்டில் இருந்ததற்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட் நகல்
2. இந்தியகுடியுரிமை கட்டுப்பாட்டு அதிகாரி இடும்முத்திரை அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்,
3. பாஸ்போர்ட்டின் கடைசிபக்கங்கள்
4. இந்தியாவுக்குள்சிவப்பு சானல்வழியாகவரும்போது ரூ.1,000மற்றும் ரூ.500நோட்டுகளைக் கொண்டுவருவதற்காக சுங்கவரித்துறையினர் அளிக்கும் நோட்டுமதிப்பு சான்றிதழ்
5. வருமான வரிக்கணக்கு எண் அட்டையின் நகல்;அனைத்து வங்கிக்கணக்குகளின் 8.11.16 முதல் 30.12.16 வரையிலான அறிக்கை நகல்ஆகியவற்றை காட்டவேண்டும்.

வெளிநாட்டு குடிமக்களாக இருக்கும் இந்தியர்கள், இந்தியவம்சாவளியினர், வெளிநாட்டினர் மற்றும் நேபாளம், பூடான்,பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியநாடுகளில் வசிக்கும் இந்தியகுடிமக்களுக்கு ரிசர்வ் வங்கிஇந்தவசதியைஅளிக்கவில்லை.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author