அதிரை பள்ளிகளில் தொடங்கியது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 34 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. இதில் முதல் 10 நிமிடம் வினாத்தாள் படிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் தேர்வு எழுதுபவர்கள் தங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கும் ஒதுக்கப்படும்.

34 ஆயிரம் மாணவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வினை 400 பள்ளிகளை சேர்ந்த 34 ஆயிரத்து 478 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 16 ஆயிரத்து 836 பேரும், மாணவிகள் 17 ஆயிரத்து 642 பேரும் ஆவர். தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Close