சவூதி மன்னர் சல்மான் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் கடந்த பிப்ரவரி 26ந்தேதி மலேசியா நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.  அதற்கு சில நாட்களுக்கு முன் மலேசிய அரசு 7 தீவிரவாதிகளை கைது செய்தது.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஐ.ஜி. காலீத் அபுபக்கர், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மலேசியாவுக்கு வருகை தரும் அரபு நாட்டு மன்னர்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.  அவர்களை நாங்கள் சரியான நேரத்தில் கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 7 பேரை பிப்ரவரி 21 முதல் 26ந்தேதிக்குள் மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் மலேசியர்.  மற்ற 6 பேரில் ஒருவர் இந்தோனேசியர்.  4 பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கிழக்காசியாவை சேர்ந்தவர் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.


 
Close