அதிரை WCC அணி APL அரை இறுதி போட்டியில் தோல்வி!

அதிரையில் இம்மாதம் 19ம் தேதி துவங்கிய APL எனும் அதிரை ப்ரீமியர் லீக்கின் முதல் அரை இறுதி சுற்று இன்று பகல் 3:00PM மணியளவில் அதிரை கிரானி மைதானத்தில் துவங்கியது. இவ்வாட்டத்தில் அதிரை WCC- வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணியும் VS தஞ்சாவூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற WCC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 
முதலில் மட்டைப்பணியை செய்த தஞ்சாவூர் அணி நிர்னயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 128 ரன்களை எடுத்தது. 129 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மட்டைப்பணியை செய்த அதிரை WCC அணி 1.5 ஓவர் மீதமுள்ள நிலையில் 123 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் தஞ்சாவூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
சென்ற ஆண்டு APL இறுதி போட்டியில் இந்த தஞ்சாவூர் அணி AFCC அணியிடம் தேல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.    

Close