அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் 3 இந்துத்துவ தீவிரவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்…!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்தது. அதில், 3 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில், சுவாமி அசீமானந்த் உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடக்கத்தில், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புக்குழு விசாரித்த இவ்வழக்கு, பின்னர், தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகளுக்கான தனிக்கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தினேஷ் குப்தா தீர்ப்பு அளித்தார். பாவேஷ் பட்டேல், தேவேந்திர குமார், சுனில் ஜோஷி ஆகிய தீவிரவாதிகளை குற்றவாளிகள் என்று அறிவித்தார். மீதி 3 தீவிரவாதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

தீவிரவாதிகளில் ஒருவனான சுனில் ஜோஷி, தற்போது உயிருடன் இல்லை. தீவிரவாதிகளுக்கான தண்டனை விவரம், 16-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

Close