அதிரை லாவண்யா மண்டபத்தில் கோலாகளமாக நடைபெற்ற EP மாடல் பள்ளியின் ஆண்டு விழா (படங்கள் இணைப்பு)

அதிரை நடுத்தெருவில் இயங்கி வரும் E.P மாடல் நர்சரி ப்ரைமரி பள்ளியின் 16-வது ஆண்டு விழா நேற்று 9-வியாழன் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் பள்ளியின் தாளாளர் அமீன் நவாஸ் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாலாளர் சைதா பானு, இமாம் ஷாபி பள்ளியின் முன்னால் முதல்வர் ஆப்தாப் பேகம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர், குழந்தைகள் நல ஆலோசகர் தாஹிரா இஸ்மத் கனீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புறையாற்றினர்.

இதில் பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர் சிறுமிகளின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழலை தண்மை மாறாமல் அழகாக இருந்த அவர்களது நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Close