துபாயில் DFCC கிரிக்கெட் தொடரில் சுழற்கோப்பையை கைப்பற்றிய அதிரை ABCC DXB அணி! (படங்கள் இணைப்பு)

 துபாயில் DFCC கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல நாடுகளை சேர்ந்த தலை சிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  டூ ஆர் டை அணியுடனான இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த அதிரை ABCC அணி 144 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய டூ ஆர் டை அணி அதிரை பந்துவீச்சாளர்களுக்கு தாக்கிபிடிக்க முடியாமல், 78 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் ABCC அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8வது முறையாக தொடர் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்லம் சிறந்த ஆல்ரவுண்டர் விருதை பெற்றார்.

தகவல்: இர்பான் சி.எம்.பி

Close