மாநில அளவிலான கராத்தே போட்டியில் மதுக்கூரை சேர்ந்த ஹாரூன் என்ற மாணவர் முதலிடம் பிடித்து சாதனை (படங்கள் இணைப்பு)

அகில இந்திய சுன்சுகான் இஷின்றியு கராத்தே கழகம் சார்பில் கடலூரில் நடைப்பெற்ற மாநில அளவிலான ( 2nd State Level ) கராத்தே போட்டியில மதுக்கூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்குபெற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். இதில் பாத்திமா மரியம் பள்ளி மாணவர்கள் முதல் இடமும் பல்வேறு பரிசுகளை வென்றனார். ஹாருன் 1 ம் இடம்,முகமது ஹிசாம் 3 ம் இடம்,இர்பான் 3 ம் இடம்,கபிலன் 1 ம் இடம்,பத்ரு சாமன் 2 ம் இடம்,ஆசிப் 3 ம் இடம்,சபீக் 3 ம் இடம்,நெல்சன் 2 ம் இடம்,ஶ்ரீ வனேஸ்வர் 2 ம் இடம்,கார்த்திகேயன் 1 மற்றும் 2 ம் இடம் (இரண்டு பிரிவுகளில்) முகமது பஹ்மி 3 ம் இடம். அர்ரஹ்மான் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவன் A.முஹம்மது ஆசிஃப் மூன்றாம் இடத்தினை பெற்றார்.

இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 475 பேர் பங்கேற்றனர்.18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுகுட்பட்டோர் என இரு பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில் மேற்கூறிய மாணவன் 10 வயதுகுட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close