அதிரையில் சிறுநீரக பாதிப்பால் தவிக்கும் பெண்ணுக்கு லன்டன் வாழ் அதிரையர்கள் நிதியுதவி

அதிரை தரகர் தெருவை சேர்ந்தவர் ஜஹபர் நாச்சியா. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் தவித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இவரால் இதற்க்கு சிகிச்சை செய்ய பண உதவி இல்லை. 
இதனை கருத்தில் கொண்ட இம்தியாஸ் அவர்கள் தலைமையிலான லண்டன் வாழ் அதிரையர்கள் குழு சார்பாக இவருக்கு மருத்துவ நிதி உதவியாக ரூபாய் 30300 இன்று மாலை 5:20 மணியளவில் வழங்கப்பட்டது. 
இதில் அதிரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் கே.கே.ஹாஜா அவர்களும், அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீத், அதிரை பிறை மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.
Close