அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வியை எட்டும் கனியாக்கி தமிழகத்திலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் உயர்கல்வியை அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி வழங்கி வருகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் துவங்கிய இந்த நிறுவனத்தின் கல்வி சேவை தொய்வின்றி இன்றளவும் இயங்கி வருகிறது. பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி இந்த நிறுவனத்தால் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். திரும்பும் துறைகளில் எல்லாம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் காதிர் முஹைதீன் கல்லூரியில் கடந்த கல்வியாண்டிம் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான 62 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கல்வியின் அங்கீகாரத்தை பெற்றுகொண்டனர். இதில் பெற்றோர்கள், முன்னாள் இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Close