அதிரையின் புதிய பட்டதாரிகளின் நெகிழ்ச்சியான தருணங்கள் (புகைப்பட தொகுப்பு)

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வியை எட்டும் கனியாக்கி தமிழகத்திலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் உயர்கல்வியை அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி வழங்கி வருகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் துவங்கிய இந்த நிறுவனத்தின் கல்வி சேவை தொய்வின்றி இன்றளவும் இயங்கி வருகிறது. பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி இந்த நிறுவனத்தால் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். திரும்பும் துறைகளில் எல்லாம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் காதிர் முஹைதீன் கல்லூரியில் கடந்த கல்வியாண்டிம் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான 62 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கல்வியின் அங்கீகாரத்தை பெற்றுகொண்டனர். இதில் பெற்றோர்கள், முன்னாள் இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது நடைபெற்ற சில நெகிழ்வான தருணங்களை புகைப்படங்களாக உங்களுக்கு வழங்குகிறொம்.

இந்த பதிவில் உங்கள் படங்களும் இடம்பெற 9597773359 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.

Close