அதிரையில் 960 அடி ஆழத்தில் இருந்து மோட்டார் இன்றி பொங்கி வழியும் நீரூற்று..!

அதிரை – முத்துப்பேட்டை E.C.R.சாலையில்
அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு எதிரில் உள்ளது இளங்கோ நகர். இங்கு பல வீட்டு
மணைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் வீடு கட்டியும் வருகின்றனர். இந்த மணைப் பிரிவில்
அதன் உரிமையாளர்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு 1000 அடிக்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர்.
960 அடியின் கீழ் பாறை ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதை ஒரு வாரத்துக்கும் முன்பு மிகவும்
சிரமப்பட்டு உடைத்துள்ளனர் ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள்.
இதனை அடுத்து அங்கு குபு குபு
வென்று நிலத்தடியில் இருந்து தண்ணீர் பொங்கி வழிந்துள்ளது. மின்சாரம் மோட்டார் வசதியின்றி
தானாக பொங்கி வழியும் இந்த தண்ணிரை கான அருகில் வசிக்கும் மக்கள் சென்று தண்ணீர் பிடித்து
வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி குடிசையில் வசிக்கும் பாட்டி வள்ளியம்மை அவர்களிடம்
விசாரித்ததில் அவர் கூறியதாவது..
960 அடிக்கு 20 நாட்களுக்கு
முன் போர் போட்டார்கள், ஆனால் திடீர் என்று 7 நாட்களுக்கு முன் இதில் இருந்து தண்ணீர்
பொங்கி வழிந்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அருகில் உள்ள பகுதிகள் தண்ணீரால் நிறம்பியுள்ளது.
மேலும் நாங்களும் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்து வருகிறோம் என்றார்.

Close