பசுமையான அதிராம்பட்டினத்தை உருவாக்க அதிரை சுற்றுசூழல் மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுதியேற்பு (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கௌரவ தலைவர் எம்.எஸ்.தாஜீதின் சென்னையிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் தலைமை வகித்தார்

. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சையத் அகமது கபீர் அனைவரையும் வரவேற்றர். நிர்வாகிகள் தேர்வில் தலைவர் வ.விவேகானந்தம், துணைதலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம், செயலாளர் எம்.எப்.முஹம்மதுசலீம், துணைசெயலாளர் மரைக்கா கே.இத்ரிஸ் அஹமது, பொருளாளர் எம்.முத்துக்குமரன்,. செயற்குழு உறுப்பினர்களாக எம்.அகமது, அகமதுஅனஸ், அ.கண்ணன், நைனாமலை, சரவணன், அப்துல்ஹலீம், வெங்டேஷ், ஹாஜாபகுருதீன், நவஸ்கான், நைனாமுகமது, அப்துல்லத்தீப், அல்தாப், சங்க தணிக்கையாளர்களாக என்.ஷேக்தம்பி, பி.சங்கர், ஏ.அப்துல்ரஹ்மான், மருத்துவ ஆலோசகராக டாக்டர் எச்.அப்துல்ஹக்கிம், ஒருங்கிணைப்பளராக சையத் அஹமதுகபீர், சட்டஆலோசகர் ஏ.முனாப், மக்கள்தொடர்புஅலுவலராக அ.கண்ணன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டன.

இதனையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுருத்தலின் படி மகளிர் மாணவ மாணவிகள் மீனவர்கள் சுயஉதவிகுழுக்கள் துப்பரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரம், திடக்கழிவு மோலாண்மை வீட்டுத்தோட்டம் அமைத்தல், இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கவேண்டும்.

அதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் விழிப்புணர்வு பிரச்சாரம், துப்பரவு தொழிலாளர்களுக்கு பொது சுகாதார துறை மூலம் மருத்துவ பரிசோதனை, மற்றும் சிகிச்சை முகாம் தூய்மையான பசுமையான அதிராம்பட்டினத்தை உருவாக்க அனைத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை , வனத்துறை, கல்வித்துறை, சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பாடுபட தீர்மானிக்கப்பட்டது. முடிவில் செயலாளர் எம்.எப் முஹம்மது சலீம் நன்றி கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author