அதிரை ரசிகர்களுக்கு கோல் விருந்து வழங்கிய AFFA அணி!


அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று  மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் மிக நடைப்பெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் ஆலத்தூர் அணியை எதிர்த்து அதிரையின் நட்சத்திர அணியான AFFA அணி களமிறங்கியது. எனவே மக்கள் கூட்டம் மைதானத்தின் நிறம்பி வழிந்தது. போட்டி துவங்கியதில் இருந்தே AFFA அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய AFFA அணியினர் எதிர் அணியை தவிடுபிடியாக்கி ரசிகர்களுக்கு கோல் விருந்தளித்தனர்.

சிறப்பாக விளையாடிய AFFA இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணி வீரர்கள் சபானுத்தீன், ஆஷிப் ஆகியோர் தலா 2 கோல்களும் ஃபுர்கான் ஒரு கோலும் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.

Advertisement

Close