இஞ்சினியரின் சேரும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…!

தொடர்ந்து 5 ஆண்டுகள் 30 சதவீத இடங்கள் நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படித்த மாணவர்கள் பலருக்கும் சரியான வேலை கிடைக்காததாலும், பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதாகவும் கூறி, கடந்த 2011ம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தேசிய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “குறைந்தது மாணவர் சேர்க்கைக்கான 30% இடங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் நிரம்பாமல் அப்படியே இருந்தால், அந்த கல்லூரிகளை மூடுமாறு அறிவுறுத்தப்படும். கல்வித் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்.” என தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மூலம் புற்று ஈசல் போல் ஆங்காங்கே உருவாகியுள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம், அதோடு பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் உயரும் என நம்பலாம்.

Close