பொறுமை உள்ள பெண்களுக்கு பொற்காலம் உண்டு

Want create site? Find Free WordPress Themes and plugins.

பொறுமை உள்ள பெண்களுக்கு பொற்காலம் உண்டு. மனிதர்களுக்கு பல வரங்களை அள்ளித் தரும் தாவரங்கள் என்ற இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள்.

மலர்கள் தங்கள் எதிர் கால இணைகளுடன் கைகளை அசைத்துக் கொள்வதில்லை, தகவல்களுக்காக காத்திருக்கும் தனிப்பிறவியாகவும். அத்தான்களை எதிர்பார்த்து தேன் நிரம்பிய பாத்திரத்தில் அமரும் வண்டுகளைக் கொண்டே தங்களின் மணமக்கள் தேவையினை நிறைவேற்றிக் கொள்கின்றன. பின்னர் காய்க்கின்றன கனிகின்றன வீரீயமிக்க சந்ததிகளை பெறுகின்றன.

தன்னுடைய கழிவினைக் கூட மனிதனுக்கு உணவாகத்தரும் தேனீக்களிடம் நமக்குத்தான் எத்தனை பாடங்கள்.

ஏதேத்சையாக வளர்ந்த மோடு முட்டி(?) தாவரங்கள் கூட வளர்ந்து பின்னாளில் வசதிக்காரர்களின் வீடுகளில் சாயம் பூசிக் கொண்டு வாழ்நாள் புதுமணத்தம்பதிகளாக மார்தட்டிக் கொள்கின்றன.

நடிகையின் முன்பகுதி முந்தானைசரியும் போது காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன் என்ற சினிமாபாடல்களை கேட்டு ரசிக்கும் போது, உலக இறுதிவரை மனித சுவாசக்காற்றை சுத்தம் செய்ய இறைவனால் நிறுவப்பட்ட தாவரங்களின் உணவுகளை சிந்திப்போம்.

Chemistry நல்லாயிருதுன்னு நினைப்பவர்களின் வீடுகளிலெல்லாம் Home Science பாதிப்படைந்து Political Sciene தாண்டவமாகிறது என்பதை உணருவோம்.

மன ஒத்திசைவு கண்களால் மட்டும் முடிந்து விடுமா? வண்டுகளால் நிச்சயிக்கப்படாத திருமணங்களில் வீரியம் உண்டோ?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

 

 

 

என்ற வள்ளுவன் வாக்கு உங்களை கொண்டுதான் வாழ்கையின் வடிவத்தை அழகுபடுத்துகின்றன.

காலிப்பானைகளில் நீருற்றி காற்றை நீக்குவது போல, நம் உள்ளங்களை நல்லெண்ணகளால் விதைப்போம். காலத்தே பயிர் செய்ய இறைவனிடம் வேண்டுவோம்.

வலிமையான சாம்ராஜியங்களில் வீழ்ச்சிக்கான முதல் காரணமே கண் பார்வைகளினால் செய்யப்பட்ட அளவீடுகளே என்பதனை உணர்ந்து நாணத்துடன் நடப்போம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author