அதிரையில் ஒரு பக்கம் வெயில், மறுபக்கம் மழை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இதை கோடை மழை என்று அழைக்கிறோம். தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. கோடையையொட்டி அடுத்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை அதிரையின் ஒரு சில பகுதிகளில் வெயிலும், ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது பலரை ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் வெயில் அடித்து வந்த நிலையில், நடுத்தெரு, ஆலடித்தெரு ஆகிய பகுதிகளில் நல்ல மற்றும் மிதமான மழை மாறி மாறி பெய்தது.

Close