உள்ளூர்விளையாட்டு

அதிரை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

தஞ்சாவூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாதாந்திர விளையாட்டு போட்டி மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2016 – 17 ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தடகளம், கையுந்துபந்து, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.


இந்தப் போட்டிகளில் விளையாட வயது வரம்பு இல்லை. தடகள விளையாட்டில் 100 மீ., 400 மீ., 800 மீ,, 1500 மீ. நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் ஆண்களுக்கும், நீச்சல் போட்டிகளில் 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ. உள்ளிட்டவற்றில் பல்வேறு பிரிவுகளில் குழுப் போட்டியாக நடக்கிறது.


கையுந்து மற்றும் பளுதூக்கும் போட்டி இருபாலருக்கும் நடக்கிறது. குழுப்போட்டியில் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றில் இருந்து ஒரு அணி மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
தடகளப் போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது. தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கும், குழுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். எனவே ஆர்வம் உள்ளவர்கள் போட்டியில் பங்குபெறலாம்.

Show More

Related Articles

Close