அமீரகத்தில் வாட் வரி விதிக்கப்பட வாய்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

பொதுவாக வளைகுடா நாடுகள் வரியற்ற நாடுகளாகவே விளங்கி வந்தன. ஒரு சில நாடுகள் மட்டும் சிற்சில வரிகளை விதித்து வந்தபோதும் அது பெருமளவில் பொதுமக்களை பாதித்ததில்லை. எப்போது வளைகுடா நாடுகளும் ‘தாராளமயமாக்கல், உலகமயமாக்கல்’ எனும் கொடுங்கரங்களை சுவீகரித்துக் கொண்டனவோ அன்றிலிருந்து பல்வேறு ‘வரிப்புலிகள்’ மக்களை பாய்ந்து பிராண்டி பதம்பார்த்துக் கொண்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், தண்ணீர், மொபைல் போன் சேவை, இன்டெர்நெட் உட்பட பலவற்றின் மீதும் சர்வதேச நடைமுறைக்கு ஒப்ப அமீரகத்திலும் ‘மதிப்பு கூட்டு வரி’ எனப்படும் வாட் வரி (VAT Tax) விரைவில் நடப்பு ஆண்டிலிருந்து சுமார் 2 முதல் 2.5 சதவீதம் வரை விதிக்கப்படும் என்றும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 சதவீதமாக உயர்த்தப்படும் வாட் வரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 12 பில்லியன் கூடுதல் வரி வருமானம் கிடைக்குமென்றும், 2019 ஆம் ஆண்டில் இதுவே 20 பில்லியன் திர்ஹமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

30 வகையான மீன்கள், கல்வி, சுகாதாரம், மிதிவண்டிகள், சமூக தொண்டுகள் போன்ற 95 வகையான சேவைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்களிப்படும் என்றும், மின் சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், கார்கள், நகைகள், கடிகாரங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு கட்டாயம் வாட் வரி விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சம்பள வருவாய் (Salary) மீதும், ஜபல் அலி ப்ரீ ஸோன் பகுதிகளிலும் வாட் வரி விதிக்கப்பட மாட்டாது. அதேபோல் ப்ரீ ஸோன் பகுதியில் தயாரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டு வரப்படும் பொருட்களுக்கும் வாட் வரி விதிக்கப்படும்.

மேற்காணும் வாட் வரி குறித்த தகவல்களை அமீரக நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ மறுத்துவிட்டது என்றாலும் விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றின் மூலம் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author