அதிரை மக்கள் ரமலான் ஜகாத் நிதியை பைத்துல்மால் மூலம் வழங்க ரியாத் கிளை வேண்டுகோள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 44 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/03/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. சாகீர் S/o மன்சூர் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

சிறப்புரை : A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை​​ : சகோ. நெய்னா முஹம்மது ( இணை செயலாளர் )

தீர்மானங்கள்:
1) ABM தலைமையகத்தில் நடந்து முடிந்த தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த தையல் வகுப்புக்கு ரியாத் ABM சார்பாக நன்றி தெரிவிப்பதோடு இதில் நமதூர் பெண்கள் மேலும் பயனடையுமாறு ரியாத் ABM சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது .

2) 10TH +2 தேர்வு முடிவடைய உள்ளதால் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு வழிகாட்டி கருத்தரங்கம் வைத்தால் நமதூர் மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அத்துடன் குறிப்பாக அரசு வேலை வாய்ப்புகள் குறித்து விழுப்புணர்வு மிகவும் தேவையுடையதாக இன்றைய காலகட்டத்தின் அவசியமாக உள்ளது. அதனை ABM தலைமையகம் முன்னின்று ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

3) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாத ஜகாத் சதக்காவை ABM மூலம் கொடுத்து ஊர் ஏழை மக்கள் பயனடையுமாறு முன்கூட்டியே நினைவூட்டப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 2017 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

​​​… ஜஸாகல்லாஹ் ஹைர்…

Close