ஆபத்தான நிலையில் அதிரை மக்கள்! மின்சார வாரியத்தின் அலட்சியம்!

அதிரை
மேலத்தெரு 16 வது வார்டு பகுதியில் ஓர் கான்கிரேட் மின் கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது.
அதன் பாதிபகுதி பெயர்ந்து அதன் உள்புர கான்கிரேட் கம்பிகள் முழுவதும் வெளியில் தெரிகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் அந்த மின்கம்பம் அருகே செல்லுவதற்க்கே அச்சப்படும் சூழல் நிலவியுள்ளது.
இது குறித்து அந்த மின் கம்பத்திற்க்கு அருகே உள்ள
வீட்டார்களிடம் விசாரித்ததில் அவர் கூறியதாவது “இந்த மின் கம்பம் கடந்த 6 வருடங்களுக்கும்
மேலாக இதே நிலையில் தான் உள்ளது. இது பற்றி மின்சார வாரியத்திடமும் இந்த பகுதி
கவுன்சிலரிடமும் எத்தனையோ முறை புகார் அளித்தோம், ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை
நிறைவேற்றவில்லை என்றும் மழைக் காலங்களில் இந்த மின் கம்பம் அருகே சென்றால் மின்சாரம்
கசிந்து ஷாக் அடிக்கும் நிலையும் உள்ளது, எங்கள் உயிர் மீதோ, எங்களின் நலன் மீதோ அவர்களுக்கு
அக்கரையில்லை என்கிறார்.”
அது
போல் கீழத்தெரு M.M.S.மளிகை எதிரில் உள்ள ஓர் மின்கம்பத்தில் அடிபாகம் சேதமடைந்து கீழே
விழும் அபாயம் உள்ளது.
மாதா
மாதம் மின்சீரமைபுக்காக நாள் முழுவதும் மின்சார விநியோகத்தை தடை செய்கிறார்களே ஒழிய
அவர்கள் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய தவறுகின்றனர். இனி வரும் நாட்களிலாவது சமபந்தப்பட்ட
நிர்வாகத்தினர் இந்த பிரச்சனையை சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிரறோம்.
Close