அதிரையில் (தரமற்ற) சாலை அமைக்கும் பணி தீவிரம் !

அதிரை கடைதெருவில்  புதிதாக அமைத்து வரும்  சாலை  பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னாள்  சில இடங்களில் அமைத்திருந்த  சாலை சரியாக அமைக்கப்பட வில்லை என்றும்  . சாலை ஓர கழிவு நீரும்   இதில் கலப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 
“செய்வதை திருந்த செய்” என்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்போம். நமதூரில் பெரும்பான்மையான மக்களின் பல நாள் கோரிக்கையான இது தாமதாக நிறைவேற்றப்படுவதுடன் தரமின்றியும் அமைக்கப்படுகிறது. இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் லேசாக தேய்தால் கூட ஜல்லிக் கற்க்கள் பெயர்ந்துக்கொண்டு வருகிறது. இது போன்று சாலை அமைத்தால் லேசான மழைக்கு கூட இந்த சாலை தாக்குப்பிடிக்காது.
இது போன்று வேண்டா வெறுப்பாக தங்கள் வேலையை பணியாளர்கள் செய்யாமல் ஒரு சேவை மனப்பானமையாக செய்யவேண்டும். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் கண்கானித்து தரமான சாலை அமைக்க வகைசெய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நமது செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீது
Close