தஞ்சையில் சீல் வைத்த வாக்குப்பதிவு எந்திரம் திறப்பு!

தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே மறியல் கிராமத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரம் சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மண்டல அலுவலர் மணிகண்டன், வாக்குப்பதிவு எந்திரத்தின் சீலை திடீரென உடைத்தார். இதனை அந்த வழியாக சென்ற முகவர் ஒருவர் பார்த்துவிட்டு, மற்ற வாக்குச்சாவடிகளில் இருந்த திமுகவினருக்கும், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் மறியல் கிராமத்தில் உள்ள சம்மபந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். டி.ஆர்.பாலு வாக்குப்பதிவு எந்திரத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி.சுகுமாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்ட பிறகு ஒரு பெட்டி ஜோர்னல் ஆபீசல் திறந்திருக்கிறார். இதுபோன்ற செயல் தவறு. எதற்காக திறந்தார் என்று தெரியவில்லை. ஆகையால் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று நாங்கள் கேட்கப்போகிறோம் என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார். 
Source: நக்கீரன்

Close