அதிரை பள்ளிவாசல்களிலும் இதனை முயற்சி செய்யலாமே…!

பள்ளிகளின் ஒழூ செய்யும் நீரின் அளவு ஒரு பள்ளியில் வக்த்துக்கு – சுமார் 200 முதல் 500 லிட்டர்கள் வரை ஒழூநீராக வெளியேறுகிறது. 5 வேளை ஒதுநீர் 2500 லிட்டர் வரை சாக்கடையில் கலக்கிறதை பாருங்கள்.

மொத்தம் – 20 பள்ளிகள் என கணக்கு வைப்போம். 20× 2500 – 50000 லிட்டர் அப்படியே சாக்கடையில் கலந்து வீனாகிறது…

உடனடியாக ஜமாஆத்தார்கள், பள்ளிநிர்வாகிகள் இனைந்து இதுபற்றி ஆலோசித்து – பொதுமக்களின் தொழூகைபள்ளியின் ஒது நீரை வீனாக்காமல். அந்தந்த பள்ளியில் சேமிப்பு தொட்டி அமைத்து #நிலத்தடி நீராக. பயன்படுத்த முயற்ச்சிக்க வேண்டுகிறோம்.

தண்ணீரை வீனாக்காமல் சேமிப்பதும் ஒரு பொதுசேவையே – அல்லாஹ் இந்த செயலுக்கும் நிறைய கூலியை தருவான்.

ஒது நீரை – நிலத்தடிநீராக சேமித்து அதன் அருகில் ஒரு மரத்தை நடுவோம். தண்ணீர் அப்படியே பள்ளிவாசலின் ஆழ்துளைக்கு செல்ல வழிவகை செய்வோம். இல்லையேல் ஒரு – சிறிய கிணற்றை உருவாக்க முயற்ச்சிப்போம்.

நமதூரில் தண்ணீர் பஞ்சம் மோசமாக உள்ளது. இன்னும் 3 மாதத்தை கடக்க வேண்டியுள்ளது.

எனவே நமதூர் ஜமாஅத்தார்கள் ஒன்றினைந்து ஆலோசித்து திட்டவடிவம் செய்து களம் இறங்கி பயன்கொடுங்கள்.

( இந்த முறையை தமிழகத்தின் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைமுறைப்படுத்தலாம்…)

தண்ணீரை பாதுகாப்பாய் சேமிக்க முயல்வோம்

Close