ரயில்களில் கிடைக்கும் உணவுகளின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..!

ரெயில்வேத்துறை கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) கேன்டீன் விற்பனையாளர்கள் தண்ணீர், டீ, காபி, சாப்பாடு உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டர், இ-மெயில் உள்ளிட்ட தளங்களில் புகார்கள் குவிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி மூலம் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களின் விலை பட்டியலும் ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டுவிட்டரில் வெளியான விலைப் பட்டியலின்படி

காபி, டீ 7 ரூபாய்

தண்ணீர் 15 ரூபாய்

காலை சிற்றுண்டி 30 ரூபாய்

மதிய உணவு 50 ரூபாய்

விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்றால் புகார் அளிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் விற்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் புகார்கள் குவிந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதிய கேட்டரிங் கொள்கைகளை வகுத்தார். அதன்படி முறையாக உணவு வழங்காத நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தடை செய்ய ஐஆர்சிடிசி க்கு உத்தரவிட்டார். மேலும்,ரெயில் பயணிகள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் முறையையும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளார்.

Close