கோவையில் தொடரும் பதற்றம்! அபுதாஹிரின் நிலை என்ன?

Want create site? Find Free WordPress Themes and plugins.

கோவை சாய்பாபா கோயில் அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் சையது அபுதாகீர்(29). உக்கடம் பிளாட்பாரத்தில் துணி கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சையது அபுதாகீர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர், விசாரணைக்கு அவரை அழைத்து சென்றார். இன்று காலை வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் திரண்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

துணை கமிஷனர் லட்சுமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசார் அழைத்து சென்ற மகனை எங்களிடம் காட்டுமாறு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதை அடுத்து 5 பேரை மட்டும் அலுவலகம் அழைத்து சென்றனர். பின்னர் யாரும் இங்கு கூட்டமாக கூடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து ஜாபர்அலி கூறியதாவது; நான் சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அதிமுக பாரம் தூக்கும் தொழிற்சங்க தலைவராக உள்ளேன். இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக எனது மகனை 20 தடவை சிபிசிஐடி போலீசார் அவர்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். நானும் மகனுடன் சென்றுள்ளேன். நேற்று மாலை 4 மணிக்கு துணிக்கடையில் இருந்த எனது மகனிடம் போலீசார் விசாரித்துவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு எனது மகன் கோட்டை மேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பி வரும் போது, அங்கு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர், துப்பாக்கியை முதுகில் வைத்தவாறு எனது மகனை தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இது எங்களுக்கு மிகுந்த அவமானமாக இருக்கிறது. விசாரணைக்காக பகலில் அழைத்து சென்றிருக்கலாம். கணவரை கொடூரமான முறையில் அழைத்து சென்றதை அறிந்த அவரது நிறைமாத கர்ப்பிணி அதிர்ச்சியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் போலீசார் அழைத்து சென்ற அபூதாஹிரின் நிலை புரியாத புதிராக உள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author