மீத்தேன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு முடிவெடுத்துள்ளது.

முன்னதாக, காவிரி டெல்டாவில் உள்ள மன்னார்குடியை மையமாகக் கொண்டு, புதுச்சேரி முதல் ராமேசுவரம் வரையிலான சுமார் 691 கி.மீ. சுற்றளவில், நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த 2010-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான உரிமம், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தால், காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் எனக் கூறி, விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து, இத்திட்டத்துக்கு மாநில அரசு ஜூலை 2013-ல் இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஜிஇஇசிஎல் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒப்பந்தப்படி பணிகளைத் தொடங்கவில்லை என்பதால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என கடந்த 2015 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மார்ச் 31-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளிக்கப்பட்ட ஜிஇஇசிஎல் நிறுவனத்தின் புதிய கடிதத்தில், ”மீத்தேன் கிணறு அமைக்க அளித்த வரைபடத்தில் குறிப்பிட்ட கோணங்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரிசெய்து, தற்போது நாங்கள் அளித்துள்ள கடிதத் துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவித்தி ருந்தது.

இந்தக் கடிதத்தை, 2015 ஜூனில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இதனால், இத்திட்டம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற அச்சம் டெல்டா மக்களிடையே நிலவியது. இதையடுத்து, போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினர்.

இந்த சூழலில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்டா பகுதி நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ம்தேதி அன்று அறிவித்தார். இதை டெல்டா விவசாயிகள், பொது மக்களின் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இந்நிலையில் தற்போது காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author