தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிரை SDPI கட்சியினர் கைது (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

கோவை சாய்பாபா கோயில் அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் சையது அபுதாகீர்(29). உக்கடம் பிளாட்பாரத்தில் துணி கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் சையது அபுதாகீர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர், விசாரணைக்கு அவரை அழைத்து சென்றார். இன்று காலை வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் அபுதாஹிரின் கைதை கண்டித்தும், சிபிசிஐடி அதிகாரிகளை கண்டித்தும் தஞ்சை ரயிலடியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் தலைவர் இலியாஸ் தலைமையில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கணக்கான SDPI கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.  இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author