அதிரையில் நாளை 21,809 பேர் வாக்களிக்கின்றனர்..!

நடைபெற
இருக்கின்ற நாடாளமன்றத் தேர்தலில் அதிரையில் மட்டும் மொத்தம் 26 வாக்களிக்கும் மையங்கள்
உள்ளது. இதில் அதிரை மொத்தம் 21,809 வாக்காளர்கள் வாக்களிக்க நாளை தயாராக உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்க்கான பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை நாடாளமன்ற தொகுதியின் தேர்தல் முடிவில் அதிரை ஒரு முக்கிய பங்குவகிக்கும் என்பது
இதன் மூலம் தெரிகிறது. மேலும் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களும் அதிரையில்
அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-அதிரை பிறை குழு
Close