அதிரையில் தடையை மீறி மது விற்பனை, பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது

அதிரையில் E.C.R சாலையில் அரசு மதுக்கடையை நடத்தி வருபவர் கருப்பசாமி
அவர்களின் மகன் சிவக்குமார். இவர் முனிசிபாலிட்டி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

நாளை நடைப்பெற உள்ள நாடாளமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆனையம் 3 நாட்களுக்கு
மது விற்ப்பனை செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி இவர் 128 மதுபானங்களை அதிக
விலைக்கு விற்ப்பனை செய்துள்ளார். இதன் மதிப்பு 9,800 ரூபாய் ஆகும்.
இன்று அதிரையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்
மற்றும் காவல்துறையினரால் இது மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தடை மீறி விற்ப்பனை செய்த சிவக்குமார் தப்பியோடிவிட்டார். இவரை காவல்
துறையினர் தேடி வருகின்றனர்.
Close