அதிரையில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்ய சுற்றுசூழல் மன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் சுற்றிவுள்ள கிராமப் பகுதிகளில் பொது இடங்களில் புகைப் பிடிப்பதால், புகைப் பிடிப்பவர் மற்றுமின்றி, புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு சூழ்நிலை உருவாகிவுள்ளது. இந்த புகையால் புற்றுநோய், நெஞ்சக நோய், மலட்டுத் தன்மை போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளன.

இதனையடுத்து பொது இடங்களான பேருந்து நிலையம், மருத்துவமனை, கடைவீதிகள், வர்த்தக நிறுவனங்கள் , கல்வி நிலையங்கள் போன்ற பகுதிகளில் புகைப்பிடித்தலை தடை செய்யக் கோரியும், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் புகையிலை உபயோக தடுப்பு விழிப்புணர்வு விளம்பரம் பலகை வைக்க கோரியும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை, தமிழ்நாடு அரசு பொதுசுகாதார துறை, உணவு பாதுகாப்புத்துறை, கல்வித்துறை, காவல்துறை, உள்ளாட்சிதுறை ஆகியன இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்கவேண்டும். உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும். விற்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 300 அடி தொலைவுக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இங்கு விழிப்புணர்வு அறிவிப்பு வைக்கப்பட வேண்டும். அனைத்து கடைகளிலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது என்றஅறிவிப்பு வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பிவுள்ளனர்.

Close