ஜமாலும் கமாலும் (அரசியல் பேச்சு)

நாளை தமிழகம்
முழுவதும் நாடாளமன்ற
தேர்தல் நடைப்பெற
உள்ளது. இது
குறித்த இருவரின்
உரையாடல்.
ஜமால்: வெயில் தாங்க முடியல, மோர் குடிச்சா நல்லா இருக்கும், பாக்கெட்டுல பத்து பைசா இல்ல
 (கடைத்தெருவில்
யோசிக்கிறார் ஜமால்,
அந்த வழியாக
அவரின் நண்பர்
கமால் சென்றுக்கொண்டிருக்கிறார்)
  ஜமால்: யார்
அது கமால்
மாதிரி இருக்கு,
ஆஹா! மோர்
குடிக்க ஆளு
ரெடி. டேய்
கமாலு, இங்க
வா! 
 (கமால்
தன் நண்பர்
அருகில் வருகிறார்)
கமால்: என்ன
மச்சான் என்ன
கூப்புட்ட மாதிரி இருந்துச்சு
ஜமால்: ஆமாம்
வெயில் அதிகமா
இருக்கு, வா மோர்
குடிப்போம்.
கமால்: சரி,
காக்கா ரெண்டு
மோர் போடுங்க 
(கடைக்காரரிடம்
மோர் ஆர்டர்
செய்கிறார் கமால்,இருவரும்
மோரை குடித்துக்கொண்டு
பேச்சை துவக்கினர்)
ஜமால்: கமாலு
 நாளைக்கு ஓட்டு
போட போரியா?
கமால்: இல்லடா,
யாருக்கு போடுரதுன்டே
சரியா தெரியல,
யார் ஆட்சிக்கு
வந்தாலும் எதுவும்
நடக்கப்போரதில்ல, நாம
ஏன் அதுக்கு
போய் வெயில்ல
கூட்டத்துல நின்று
போடனும்
ஜமால்: என்ன
இப்புடி சொல்ற,
வோட்டு போடுறது
நம்ம ஜனநாயக
கடமை, உங்கள
மாதிரி சில
பேர் இப்புடி
வோட்டு போடமாக
இருக்குறதால தான்
நம்முடைய கோரிக்கைகள்
இன்னும் பரிசீலனையிலேயே
கிடக்குது, நடைமுறைக்கு
வரமாட்டிக்குது.
கமால்: நீ
சொல்லுரது புரியுது,
இருந்தாலும் எனக்கு
எந்த வேட்பாளர்
மீதும் ஒரு
நல்ல சிந்தனை
வரல, அப்போ
நான் யாருக்கு
வாக்களிக்கிறது.
ஜமால்: நீ
செய்திதாள், டி.வி.
நியூஸ் எல்லாம்
பாக்குறதில்ல, நீ
ஒரு வோட்டு
போடல அப்படின்னா
அந்த வோட்டு
கள்ள வோட்டா
மாறுறதுக்கு வாய்ப்பு
இருக்கு, அதுக்கு
தான் இந்த
தேர்தல்ல நோட்டா
அப்புடிங்கிற சின்னத்த
அறிமுகம் செஞ்சிருக்காங்க
கமால்: நோட்டாவா, அப்புடின்னா என்ன?
ஜமால்:நோட்டா (None of the Above – NOTA; புதிதாக வாக்கு) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். தான் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம்.
கமால்: ஓ, இப்புடி ஒன்னு இருக்குதுன்னு எனக்கு இப்பதான் தெரியும், அப்ப நம்ம ஓட்டு நோட்டாவுக்கு தான். நீ யார்க்கு ஓட்டு போட போற ஜமாலு?
ஜமால்: வர 5  வருஷத்துல நம்ம ஊருக்கும், நாட்டுக்கும் யாரால நல்ல விஷயம் நடக்குமோ அந்த வேட்பாளருக்கு தான் என் வோட்டு, நோட்டாவுக்கு போட்டு என் வாக்கை வீனடிக்க மாட்டேன்
கமால்: எது எப்படியோ, இந்த தேர்தல் பிரச்சாரம் எல்லாம் முடிஞ்சு ஊரே அமைதியா இருக்குது.
ஜமால்: ஆமாம், ஒரே சத்தம், பரபரப்பு, இது நம்ம ஊரா? என்னக்கே சந்தேகம் வர அளவுக்கு நம்ம ஊரு மாறி போய் இருந்துச்சு
கமால்: நம்ம ஊருல சில கட்சிகள் பணம் பட்டுவாடா பண்றதை துவக்கிட்டாங்களாம், கேள்விப்பட்டேன்
ஜமால்: நானும் கேள்விப்பட்டேன், ஆனா எங்க தெருவு பக்கம் யாரும் வந்த மாதிரி தெரியல..
கமால்: அதுமட்டுமில்ல டா நேத்து இரவு சி.எம்.பி லேன் பக்கம் பணம் பட்டுவாடா பண்றதை தடுக்க பறக்கும் படையினர் வந்ததாகவும் சொல்றாங்க
ஜமால்: எது வேண்டுமானாலும் இருக்கட்டும், நம்ம மக்கள் இப்பொழுது விழிப்புணர்வு அடஞ்சுட்டாங்க, பணத்துக்கெல்லாம் ஓட்டு போடுற நிலைமைல் அவங்க இல்ல
கமால்: இந்த முறை ஒரு நல்ல தேர்தல் முடிவை நாம் எதிர் பார்க்கலாம்
(இருவரும் மோரை அருந்திமுடித்தனர்)
ஜமால்: மச்சான் காசை நாம் குடுத்துடுரேன்
கமால்: இல்ல டா எனக்கு 100 ரூபாய்க்கு சில்லரை தேவைப்படுது அதனால் நானே கொடுக்குறேன்
ஜமால்: சரி, நாளைக்கு பாப்போம், 7 மணிக்கு வீட்டுக்கு வரேன் ஓட்டு போட போவோம்
கமால்: சரி நாளைக்கு வா. 
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)
Close