விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் அதிரை மாணவர்களே!

Want create site? Find Free WordPress Themes and plugins.

விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன.

இணையதளம்

விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த மாணவ, மாணவிகளாக விளங்குவதற்காக 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் உரிய படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இலவசமாக பெற்று கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதி தொடர்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் அடுத்தமாதம்(ஏப்ரல்) 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author