வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஆதார் சட்டத்தின்படி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதார் அட்டை அவசியமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி 182 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்போர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள் ஆதார் அட்டை எடுக்க உரிமையில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகள் சிறப்பு விலக்கின் அடிப்படையில் தொடர்ந்து கிடைக்கும் என விளக்கமளித்துள்ளனர். அதேவேளை ஏற்கனவே இந்நடைமுறை தெரியாமல் ஆதார் அட்டை எடுத்தவர்களின் நிலை குறித்து தெளிவு எதுவுமில்லாததுடன் எடுக்கப்பட்டுவிட்ட அந்த அட்டைகளை ரத்து செய்யவும் முடியாதாம். ஏனெனில் ஒருமுறை வெளியாகும் அந்த எண் நிரந்தரமானதாம். தெரிந்தோ, தெரியாமலோ ஆதார் அட்டை எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களை தண்டிக்கும் சட்டங்களும் ஏதுமில்லை என்றும் இந்திய அரசின் உயரதிகாரியான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். இவர் தான் ஆதார் அட்டைகளை வழங்கும் மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அட்டைகளின் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author