வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.28-க்கு விற்பனையாகிறது. விலைக்குறைப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.51-க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை ரூ.62.48-ல் இருந்து ரூ.59.57 ஆக குறையும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு எதிராக இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

Close