அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின்  10
வது மாதாந்திர கூட்டம்
கடந்த 18/04/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.


தொகுப்பு:-
தலைமை             : சகோ. சரபுதீன்

கிராத்                  : சகோ. நெய்னா
வரவேற்புரை
       : சகோ. அபுபக்கர்
சிறப்புரை            : சகோ.
அகமது ஜலீல்
மாதாந்திர
அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது
தீர்மானங்கள்:-
* ரியாத் ABM சார்பாக 4 ஜனாஸா
தொட்டிகள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகையை விரைவில் அனுப்புவதென
முடிவு செய்யப்பட்டது ( 17000 X 4 =
68000 )
* ஜனாஸா தொட்டிக்கு நிதி வழங்கியதற்காக ரியாத்தில்
உள்ள அதிரை வாழ் மக்களுக்கு ரியாத் அதிரை பைத்துல்மால் சார்பாக மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொல்கிறோம்.
* பைத்துல்மாலுக்கு
செலுத்தப்படும் ஜகாத் தொகை அந்தந்த
வருடத்திற்குள் விநியோகிக்கப்படுகிறதா அல்லது அந்‌த தொகையை திட்டங்கள் மூலம் ( long term
plan )  செயல்படுத்தபடுகிறதா
என ஒரு சகோதரர் கேட்டதற்கு இனங்க விளக்கம்
அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* ரமலான்
மாதத்தில் மெகா கூட்டம் அதிரை ரியாத் வாழ் மக்கள் அனைவரையும் அழைத்து வருட சந்தா வசூலிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது
* அடுத்த
அமர்வு இன்ஷாஅல்லாஹ் MAY 9-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு
செய்யப்பட்டது.
* நன்றியுரை:
சகோ. அப்துல் காதர்.
Close