அதிரையில் கோலாகளமாக தொடங்கிய AFCCன் APL கிரிக்கெட் தொடர் (படங்கள் இணைப்பு)

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) அணி வருடா வருடம் கிரிக்கெட் பந்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறது. அந்த வகையில் அந்த அணி 12-வது ஆண்டாக நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 1/04/2017 காலை நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் கோலாகளமாக தொடங்கியது.

இன்றைய முதல் நாள் ஆட்டத்தை AFFA அணியின் பயிற்சியாளர் அன்வர், AFFA ஷேக் தம்பி, SISYA தலைவர் அஹமது அனஸ் ஆகியோர் வீரர்களுக்கு கைகுழுக்கி தொடங்கி வைத்தனர். இன்றைய தினம் அருண் நெட்ஸ் தஞ்சை அணியை எதிர்த்து தஞ்சை -11s அணியினர் விளையாடி வருகின்றனர்.

கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.
முதல் பரிசு: ₹30,000
இரண்டாம் பரிசு: ₹20,000
மூன்றாம் பரிசு: ₹10,000
நான்காம் பரிசு: ₹10,000

Close