பொதுமக்களின் கவனத்திற்கு..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. கீழே விபரபாக உள்ள செய்திகளை படித்துவிட்டு பகிருங்கள்.

ஏப்.,இன்று 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து,, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் 75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பின்னர், இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது விற்பனையாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது பழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் அதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளில் இருக்கும்.

✓ கார்டில் புகைப்படம் அருகில், ‘பி.எச்.எச்., – ரைஸ்’ என்றிருந்தால், அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

✓ ‘பி.எச்.எச்., – ஏ’ என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.

✓ என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.

✓ ‘என்.பி.எச்.எச்., – எஸ்’ என்றிருந்தால், சர்க்கரை மட்டும்.

✓ ‘என்.பி.எச்.எச்., – என்.சி.,’ என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

✓ ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ‘பான் கார்டு’ வடிவில் இருக்கும்.

✓ அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’ என அச்சிடப்பட்டிருக்கும்.

✓ அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும்.

✓ பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் ‘கியூ.ஆர்., (QR) என்ற ரகசிய குறியீடு இருக்கும்.

✓ கார்டின் கீழ் பகுதியில், ‘இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது’ என, எழுதப்பட்டிருக்கும்.

✓ ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

புதிய குடும்ப அட்டை அறிமுகம்….
ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை

ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், ‘பி.எச்.எச்., – ரைஸ்’ என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; ‘பி.எச்.எச்., – ஏ’ என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். ‘என்.பி.எச்.எச்., – எஸ்’ என்றிருந்தால், சர்க்கரை; ‘என்.பி.எச்.எச்., – என்.சி.,’ என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ‘பான் கார்டு’ வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’ என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் ‘கியூ.ஆர்.,’ என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், ‘இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது’ என, எழுதப்பட்டிருக்கும்.

ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author