பட்டுக்கோட்டையில் பா.ஜ.க வின் எச்.ராஜா வை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டிணம், சேதுபவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூடி கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்திற்கு அதன் மாவட்ட தலைவர் இ.மா.ராஜா தலைமை தாங்கினார், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் சிவா, பழனிவேல் , பட்டுக்கோட்டை நகர தலைவர் முருகதாஸ், பேராவூரணி நகர தலைவர் கான்முகம்மது, செயலாளர் ஜகுபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து எல்லா இடங்களிலும் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி தரக்குறையவான வார்த்தைகளையும் பதிவு செய்யும் எச் ராஜா மீது பாரதிய ஜனதா கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நன்றி: இ.மா.ராஜா (தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க தலைவர்)

ர்

Close