அதிரையில் TNTJ வின் தெருமுனைப் பிரச்சாரம் (புகைப்படங்கள் இனைப்பு)

அதிரையில் இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. 

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எதற்க்கு முன்பு அ.தி.மு.க வை ஆதரித்தது? தற்பொழுது அதை எதற்க்கு வாபஸ் பெற்றது? 36 தொகுதிகளில் எதற்க்கு தி.மு.க வை ஆதரிக்கிறது? பிற நான்கு தொகுதிகளில் எதற்க்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது? 
என்பது போன்ற மக்கள் மத்தியில் நிலவி வரும்  குழப்பமான கேள்விகளுக்கு அதிரை TNTJ வை சேர்ந்த சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
இந்த கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி ஜமால், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, அதிரை TNTJ நிர்வாகிக மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close