அதிரை ECR சாலையில் மதுபானக்கடை (TASMAC) அகற்றம் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் 5,672 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,400 கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனே மூடுமாறு நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன. மேலும், அக்கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்படுகின்றன.

அந்த வகையில் அதிரை ECR சாலையில் ஏரிபுறக்கரை அருகே அமைந்துள்ள மதுபானக்கடை இன்று முதல் அகற்றப்பட்டது.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author