பதிவுகள்

அதிரை வண்டிப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சாலையோர தேர்தல் பிரச்சாரம்..!

வரும் 24 ம் தேதி நடைப்பெற
உள்ள நாடாளமன்ற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சியினர் நமதூரில்
தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்க்கு ஈடுகட்டும் வகையில்
அதிரை நகரில் அவ்வப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்கள் கட்சியின் தஞ்சை
தொகுதி வேட்பாளர் தமிழ்செல்வி அவர்களை ஆதரித்து பல வகைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை
நமதூர் வண்டிப்பேட்டை சாலையில் அக்கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். இதில்
அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Close