அதிரையில் மமக தொழிற்சங்கம் சார்பாக இருவேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு! (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் பகலில் வெயிலில் வருவதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிரையிலும் பிற ஊர்களுக்கு இணையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனை அடுத்து வெயில் வெளியில் மக்களின் தாகம் தணிக்க அதிரை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் அதிரை பேருந்து நிலையம் மற்றும் தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாப் ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டது. துவக்க நாளான இன்று மோர், வெள்ளரி உள்ளிட்டவை பொதுமக்களும், பேருந்து பயணிகளுக்கும் வழங்கப்பட்டன.

இதில் தக்வா பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தலை தமுமுக அதிரை நகர செயலாளர் கமால் திறந்து வைத்தார். அதே போன்று பேருந்து நிலைத்தில் உள்ள தண்ணீர் பந்தலை அதிரை நகர மமக செயலாளர் இத்ரீஸ் அஹமது திறந்து வைத்தார். இதற்கு மமக தொழிற்சங்க பிரிவு செயலாளர் ஹக்கீம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் நகர தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Close