அதிரையை சேர்ந்த 2 மிளகாய் பொடி கொள்ளையர்கள் கைது..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை மேலாளர் அரவிந்த் எஸ்.குமார், காசாளர் ஆர்.சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை மல்லிப்பட்டினத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து நாட்டுச்சாலை வங்கிக் கிளைக்கு தேவையான ரூ.20 லட்சத்தை சூட்கேசில் வைத்து வாடகைக்காரில் எடுத்துச் சென்றனர். காரை நாட்டுச்சாலை என்.பழனிவேல் ஓட்டி வந்தார்.

மதியம் 1 மணியளவில் காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் காரை வழி மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, ரூ.20 லட்சம் பணம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் சிலம்பவேளாங்காடு வீராச்சாமி மகன் சதீஷ் (24)என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டை வடசேரி சாலை அப்துல்கலாம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் போலீஸார் தேடிய சதீஷ் என்பதும், அவருடன் வந்தவர் அவரது நண்பர் கண்ணுக்குடி மேற்கு தமிழ்ச்செல்வம் மகன் வீரமணி (22) என்பதும் தெரிய வந்தது.

இருவரிடமும் விசாரித்ததில் வெளியான தகவல்கள்:
இவர்கள் தங்கள் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மல்லிப்பட்டினம் ஐஓபி வங்கியிலிருந்து நாட்டுச்சாலை ஐஓபி வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் காரை மறித்து பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சதீஷும், சாமிநாதனும் கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று காசாங்காடு நடைபாலம் அருகே காரை வழி மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, ரூ.20 லட்சம் பணம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

பின்னர், கண்ணுக்குடி மேற்கு கிராமத்திலுள்ள வீரமணி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த இருவருடன் சூட்கேசை கொடுத்து வீட்டுக்குள் மறைத்து வைக்கும்படி கூறியுள்ளனர். அப்போது கொள்ளையடித்த பணத்தில் ரூ.2 லட்சத்தை எடுத்து 2 பேரும் வெளியே சென்று விட்டனராம். இவ்வாறு சதீஷ், வீரமணி இருவரும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீரமணி வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை மீட்ட போலீஸார் சதீஷ், வீரமணி இருவரையும் கைது செய்தனர். ரூ.2 லட்சத்துடன் தலைமறைவான மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author