அதிரை பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

Want create site? Find Free WordPress Themes and plugins.


 அதிரையில் இன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து அதிரை மனித நேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார எழுச்சிக்கூட்டம் நமதூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்ட ம.ம.க தலைவர் தஞ்சை பாதுஷா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.அஸ்லாம் பாட்ஷா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள், த.மு.மு.க வின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துக்கொண்டு  எழுச்சியுறையாற்றினார்கள். இதற்க்கு முன்னதாக தி.மு.க வின் அதிரை நகர செயலாளர் திரு.இராம.குணசேகரன் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார்கள். அதிரை த.மு.மு.க வின் பொருளார் செய்யது முகம்மது புகாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த புருசோத்தமன்  வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்கள்.

மேலும் இதில் கூட்டனி கட்சிகளான தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,  விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

 

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author