அதிரையின் குப்பை பாதையை தெரியுமா உங்களுக்கு…?

அதிரை ஹாஜா நகர் தரகர் தெருவில் இடையிலான சந்து கடந்த பல ஆண்டுகளாகவே குப்பைகள் அப்பகுதி மக்களின் குப்பை கொட்டும் பகுதியாகவே இருந்து வருகிறது. பிற பகுதிகளில் எல்லாம் ஒரு மூலையில் குப்பைகள் கொட்டிக்கிடப்பதை பார்த்திருப்போம். ஆனால், இந்த ஒரு பாதையே குப்பைகளாப் நிரம்பி இருப்பதை பார்க்கும் போது புரிந்திருக்கும், இதனால் பரவும் நோய்கள் குறித்து.

தொடர் கொசுத்தொல்லைகள், துர்நாற்றங்களை சகித்துக்கொண்டு தான் இப்பகுதி மக்கள் காலம் கடத்தி வருகின்றது. இவற்றை அகற்றி இப்பகுதியில் ஆங்காங்கே திடமான குப்பை தொட்டிகளை அமைத்தால் இதற்கு ஒரு தீர்வாக அமையும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Close