அதிவேக ஜெட் விமானத்தை இயக்க இருக்கும் காஷ்மீரை சேர்ந்த உலகின் முதல் பெண் ஆயிஷா அஜீஸ்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடிய அதிவேக ஜெட் விமானத்தை இயக்கவிருக்கும் முதல் பெண் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண்.
காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது இளம்பென் ஆயிஷா அசிஸ். கடந்த வாரம் வணிக ரக விமானங்களை ஓட்டுவதற்கான பைலட் உரிமத்தைப் பெற்றார். தற்போது ஒலியை விட வேகமாகச் செல்லகூடிய MIG-29 என்ற போர் விமானத்தை இயக்கவிருக்கிறார். இச்சாதனை நிகழ்த்தப்பட்டால் இம்மாதிரியான கனரக போர் விமானத்தை இயக்கக்கூடிய உலகின் முதல் பெண் என்ற அந்தஸ்த்தை பெறுபவர் ஆவார்.

இந்த ரக விமானத்தை ரஷ்ய விமான தளத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிஷா தனது 16-ம் வயதிலேயே விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார். விமானியாவதே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு வருபவர் விண்வெளி வரை பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

வின்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை தனது முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் ஆயிஷா தன்னை போர் ரக விமானியாக அறிவிப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author