23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து கடல்வழி ஹஜ் பயணம் தொடக்கம்

மும்பையில் இருந்து கடல்வழியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை – ஜித்தா இடையே கடல் வழியாக நடைபெற்று வந்த ஹஜ் பயணம் கடந்த 1995ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், கடல்வழியாக பயணம் மேற்கொள்ளும்போது பயணச்செலவு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது. மேலும் நவீன மயமாக்கப்பட்டுள்ள கடற்பயணத்தால் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை கப்பலில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். மும்பை தவிர கொல்கத்தா மற்றும் கொச்சியும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றன.

Close