74 சதவீத இஸ்லாமியர்களின் நண்பர்களாக இந்துக்கள் உள்ளனர்-ஆய்வில் தகவல்

33சதவீத இந்துக்களின் மிக நெருங்கிய நண்பர்கள் முஸ்லீம்கள் தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வு மையம் (CSDS) தேர்தல் நிலைப்பாட்டில் அரசியல் மற்றும் சமூகம் குறித்தஓர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவின் படி, : 33சதவீத இந்துக்களின் மிக நெருங்கிய நண்பர்கள் முஸ்லீம்கள் என்றும். 74 சதவீத மூஸ்லிம்களின் மிக நெருங்கிய நண்பர்கள் இந்துக்கள் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கபட்டுள்ளது. அதே போன்று முஸ்லீம்கள் மிகச் சிறந்த நாட்டு பற்று மிக்கவர்கள் என்று 13சதவீத இந்துக்கள் நம்புகின்றனர்.

குஜராத், ஹரியானா, கர்நாடகா மற்றும் ஓரிசா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்கள் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

-indian express

Close